தைவானுக்கு அமெரிக்க அதிகாரிகள் செல்வதை சீனாவால் தடுக்க முடியாது: பெலோசி

அமெரிக்க அதிகாரிகள் தைவான் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. தைவான் வளர்ச்சிக்கு நாங்கள் எல்லா ஒத்துழைப்பையும் தருவோம்.  என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தைவானுக்கு அமெரிக்க அதிகாரிகள் செல்வதை சீனாவால் தடுக்க முடியாது: பெலோசி

தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க அதிகாரிகள் அங்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. தைவான் வளர்ச்சிக்கு நாங்கள் எல்லா ஒத்துழைப்பையும் தருவோம் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தேவைப்பட்டால் தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளவோம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அச்சுறுத்தி வந்தது.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் தெரிவித்தது.

எனினும், ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

டோக்கியோவில் பெலோசி கூறிய கருத்துக்கள், சீனாவைக் கோபப்படுத்தி அது தைவான் பயணத்தின் மூலம் எதிரொலித்தது. 

25 ஆண்டுகளுக்குப் பிறகு தைவானுக்குச் செல்லும் முதல் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவரான பெலோசி, புதன்கிழமை தைபேயில், நீா்ச்சந்தி பகுதி மற்றும் பிற இடங்களில் ஜனநாயகத்திற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு இரும்புக் கவசமாக உள்ளதாக கூறினார். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்தச் சூழலில், சீன ராணுவம் வியாழக்கிழமை மதியம் தைவான் தீவைச் சுற்றிலும்  ராக்கெட் குண்டுகள் வீசி போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

தைவான் விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு வீரா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com