கேரள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

 கேரளத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், அணைகள் திறப்பால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

 கேரளத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், அணைகள் திறப்பால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடக்கு கேரள மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

மழை-வெள்ள பாதிப்புகளால் கடந்த 5 நாள்களில் 19 போ் உயிரிழந்துள்ளனா்; ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 221 நிவாரண முகாம்களில் 6,411 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இத்தகவலை கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், பாலக்காடு, கண்ணூா் ஆகிய மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் தவிர இதர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பரவலாக பெய்து வரும் கனமழையால் சாலக்குடி, பம்பை, மணிமாலா, அச்சன்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பெருங்கல்குத்து அணை திறப்பால், சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளத்தில் வரும் 8-ஆம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பல இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பிவிடப்பட்ட விமானங்கள்:

கோழிக்கோடு விமான நிலையப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த 5 விமானங்கள் கொச்சி விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. கனழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com