சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மகாராஷ்டிரம்: மரக்கிளையில் அமர்ந்திருந்த குரங்குகளுக்கு நேர்ந்த பரிதாபம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வனப்பகுதியில் மரக்கிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் மின்னல் பாய்ந்து பரிதாபமாக பலியாகின.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2022, 3:47 pm IST

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வனப்பகுதியில் மரக்கிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் மின்னல் பாய்ந்து பரிதாபமாக பலியாகின.

இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 4) அன்று நாக்பூரில் உள்ள காபா வனப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதனை வனத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது: “ குறைந்தது 9 குரங்குகள் மரக் கிளையில் அமர்ந்திருந்தன. மழை நேரம் என்பதால் மின்னல் அதிகமாக இருந்துள்ளது. மின்னல் இந்த குரங்குகள் அமர்ந்திருந்த மரத்தின் மீது பாய்ந்ததில் மரத்தில் அமர்ந்திருந்த அனைத்துக் குரங்குகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. பின்னர், அந்தக் குரங்குகளின் உடல்கள் குழி தோண்டி ஒன்றாக புதைக்கப்பட்டன.” என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.