
பெண்கள் நிலத்தை உழக் கூடாதாம்.. கெட்ட சகுனமாம்! அபராதம் விதித்த பஞ்சாயத்து
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்தில், டிராக்டர் கொண்டு நிலத்தை உழுத பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காரணம், பெண்கள் நிலத்தை உழக் கூடாது என்றும், அது கெட்ட சகுனம் என்றும் ஒரு மூடப்பழக்கமே.
தாஹு டோலி என்ற கிராமப் பஞ்சாயத்தினர், மஞ்சு ஓரோனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தை உழக் கூடாது என்றும், மீறினால் தண்டனை விதிக்கப்படும் என்றும்.
இதையும் படிக்க | 2 மாதங்களில் 3 முறை ரெப்போ விகிதம் உயர்வு; புதிதாக வீடு வாங்குவோருக்கு பேரிடி
சுமார் பத்து ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் மஞ்சு, தொடர்ந்து விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் பயன்படுத்தி விற்பனைக்கு வந்த டிராக்டர் ஒன்றை வாங்கினார். தனது நிலத்தில் காய்கறிகளை பயிரட, டிராக்டரைக் கொண்டு உழுதுள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாயத்திலிருந்து என்னைக் கூப்பிட்டார்கள். நிலத்தை உழுவது ஆண்களின் வேலை என்றும், பெண்கள் நிலத்தை உழுதால் அது அபசகுனம் என்றும் கிராமத்துக்கு பெரிய ஆபத்து அல்லது வறட்சி ஏற்படும் என்றும் எனக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க | அரசியல் கட்சிகளே உஷார்.. திருந்தவேண்டிய நேரம் வந்துவிட்டதோ?
தான் ஏர் உழவில்லை என்றும், டிராக்டர் கொண்டுதான் உழுவதாக விளக்கம் அளித்தும் பயனில்லை. நான் நிலத்தை உழக் கூடாது என்று பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. மீறினால் தான் மற்றும் தனது குடும்பம் கிராமத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். அபராதம் விதிக்கவும் கூறியுள்ளனர். இது எதையும் ஏற்காமல் தான் பஞ்சாயத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் மஞ்சு கூறினார்.
கிராமத்தினரின் மனதை மாற்ற எத்தனையோ முறைகளை கையாண்டும் எதுவும் பலனளிக்காமல் போனதையடுத்து காவல்நிலையத்தை நாடியுள்ளார்.