சமுத்ரயான் திட்டம்: கடலுக்கு அடியில் முதல் முறையாக மனிதர்களை அனுப்பி ஆய்வு

மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு நடத்தும் ஆழ்கடல் ஆய்வுக்கலமான சமுத்ரயான் திட்டத்தை  முதல் முறையாக இந்தியா  மேற்கொள்ளவிருக்கிறது.
சமுத்ரயான் திட்டம்: கடலுக்கு அடியில் முதல் முறையாக மனிதர்களை அனுப்பி ஆய்வு
சமுத்ரயான் திட்டம்: கடலுக்கு அடியில் முதல் முறையாக மனிதர்களை அனுப்பி ஆய்வு

ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளிஉலகுக்குத் தெரியாத மர்மங்களை வெளிக்கொணர மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு நடத்தும் ஆழ்கடல் ஆய்வுக்கலமான சமுத்ரயான் திட்டத்தை  முதல் முறையாக இந்தியா  மேற்கொள்ளவிருக்கிறது.

இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சமுத்ரயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலுக்குள் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய உதவும்  தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உணர்திறன் தன்மை கொண்ட கருவிகளுடன் மூன்று பேர் கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்துக்குள் சென்று ஆய்வு நடத்துவார்கள். 

இந்த திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் என்பது 2020 - 2021  முதல் 2025 - 2026 வரையாகும். 

மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருக்கும் இந்தியா, கடற்கரையோரம் 9 மாநிலங்களையும் 1,382 தீவுகளையும் கொண்டிருக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com