10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு: ஆனால்?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஏழு வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டு அவரது தாய் மற்றும் சகோதர சகோதரிகளிடம் சேர்த்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு: ஆனால்? கோப்புப் படம்
10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு: ஆனால்? கோப்புப் படம்


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஏழு வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டு அவரது தாய் மற்றும் சகோதர சகோதரிகளிடம் சேர்த்துள்ளனர்.

ஆனால், என்ன, ஏழு வயது சிறுமியாகக் காணாமல் போனவர் தற்போது 16 வயது இளைஞியாக மீட்கப்பட்டுள்ளார். இந்த  விவகாரத்தில் அரசியல்வாதி ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன் நகர் காவல்நிலையத்தில் சிறுமிகள் காணாமல் போன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 166வது சிறுமியின் பெயர் பூஜா. காணாமல் போன சிறுமிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திர போஸ்லே மிகத் தீவிரமாக இப்பணியை மேற்கொண்டு வந்தார். அவரது பணிக்காலத்தில் அதாவது 2008 முதல் 2015 வரை அவர் 165 குழந்தைகளையும் மீட்டுக்கொடுத்துவிட்டார். ஆனால், 2015ஆம் ஆண்டு அவர் ஓய்வுபெற்றபோது பூஜா மட்டும் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. அதன்பிறகு அவரைத் தேடுவோரும் யாரும் இல்லை.

ஆனால் பணிஓய்வு என்பது அவரது காவல்பணிக்குத்தானே தவிர, அவரது மனிதாபிமானத்துக்கு இல்லை என்று சொல்லும் வகையில், அந்தச் சிறுமியின் புகைப்படத்தை எங்குப் போனாலும் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால் போஸ்லே.

66 வயதாகும் போஸ்லேவின் நம்பிக்கை வீண் போகவில்லை. "அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன். எப்போது நான் மும்பை சென்றாலும் அவரைத் தேடும் பணியில் ஈடுபடுவேன்" என்கிறார் போஸ்லே.

காவல் பணியில் இருந்த போது பூஜாவை தேட ஆயிரக்கணக்கான வீட்டின் கதவுகளைத் தட்டியுள்ளேன். ஏராளமான தகவல்களை திரட்டியுள்ளேன். எல்லாம் வீணாகின. ஆனால் 4 நாள்களுக்கு முன்பு மாஹிம் தர்காவில் தொழுகை நடத்திவிட்டு, ஊருக்குத் திரும்பும் முன், அந்த சிறுமியின் தாயைச் சந்தித்துப் பேசினேன்.

பூஜா காணாமல் போவதற்கு முன்பு அவரை கடைசியாகப் பார்த்தவர் அவரது சகோதரர் ரோஹித். அன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது பள்ளி அருகே இருந்த  மரக்கட்டை மீது பூஜா அமர்ந்திருந்தார். என்னுடன் பள்ளிக்கு வர அவர் மறுத்துவிட்டார். எனது தாத்தா எனக்குத் தரும் 10 ரூபாயில் அவருக்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டும். அதைக் கேட்டார். நான் அதை பள்ளி இடைவேளையில் கொடுப்பதாகக் கூறினேன். அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் நான் வேகமாக பள்ளிக்குள் நுழைந்தேன். ஆனால் அவர் பள்ளிக்கு வரவேயில்லை என்று கூறுகிறார் ரோஹித்.

அன்று என்ன நடந்தது என்று பூஜா கூறியிருப்பது என்னவென்றால், சகோதரனுடன் நடந்த பேச்சுவார்த்தையை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் பூஜாவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளார். அப்போது அரசியல்வாதி டிசோசா மற்றும் அவரது மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால், பூஜாவை வாங்கி தாங்களே வளர்க்க விரும்பி அவரது பெயரை அன்னி என்று மாற்றினர். 3 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறக்க வேலைக்காரப் பெண்ணாக ஆக்கப்பட்டார் பூஜா. அவரது வீடு மட்டுமல்லாமல் வெளி வீடுகளிலும் வேலை செய்ய அனுப்பப்பட்டுள்ளார்.

"அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினர். பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது அவர்கள் என் தாய் தந்தை அல்ல என்பது, பிறகு நான் சம்பாதித்தப் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிய வர, அக்கம் பக்கத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி போது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பூஜா மீட்கப்பட்டு குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com