
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட்டின் அனைத்து கட்டங்களும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது. ஆனால், ராக்கெட்டில் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் வரவில்லை. சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படிக்க | மாணவிகளின் செயற்கைக்கோள்! விண்வெளித் துறையின் புதிய சாதனை எஸ்எஸ்எல்வி
இஓஎஸ்-02, ஆசாதிசாட் செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.