2ஜி எத்தனால் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

உலக உயிரி எரிபொருள் நாளான இன்று ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு 
2ஜி எத்தனால் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி


புதுதில்லி: உலக உயிரி எரிபொருள் நாளான இன்று ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

ஹரியாணா மாநிலம் பானிப்பட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் ரூ.900 கோடி மதிப்பிலான 2ஜி எத்தனால் தொழிற்சாலை அரசு பானிப்பட் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான இந்தத் தொழிற்சாலை இந்தியாவின் கழிவுப் பொருளை செல்வமாக்கும் முயற்சிகளில் புதிய அத்தியாயமான இந்த தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஆகஸ்ட் 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

காணொலி மூலம் நடைபெறும் இந்த விழாவில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 

இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் டன் வைக்கோலை பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை தயாரிக்கும் திறன் பெற்றதாகும். தினமும் 100 கிலோ லிட்டர் எத்தனாலை தயாரிக்கும். இதனால் ஒரு லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். 

உயிரி எரிபொருள் என்பது கூடுதல் வருவாய் உருவாக்க வாய்ப்பை வழங்குவதன் மூலம் வேளாண் பயிர்களின் கழிவுப்பொருட்களை பயன்படுத்துவது விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் உருவாக்க வாய்ப்பை வழங்குவதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கும். இந்தத் தொழிற்சாலை பணியில் ஈடுபடுவோருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதோடு, வைக்கோலை வெட்டுதல், கட்டுதல், இருப்புவைத்தல் போன்ற விநியோகத் தொடர் மூலம் மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கும்.

இந்தத் தொழிற்சாலையிலிருந்து திரவ வெளியேற்றம் இருக்காது. வைக்கோல் எரிப்பை குறைப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3 லட்சம் டன்னுக்கு சமமான கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைப்பதிலும் இது பங்களிப்பு செய்கிறது. 

இந்தத் தொழிற்சாலையின் அர்ப்பணிப்பு, நாட்டில் உயிரி எரிபொருளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க கடந்த பல ஆண்டுகளாக அரசால் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளின் ஒருபகுதி என்று அரசு தெரிவித்துள்ளது.

எரிசக்தித் துறையை மேலும் செலவு குறைந்ததாக, எளிதில் கிடைக்கக் கூடியதாக, திறன் மிக்கதாக, நீடிக்க வல்லதாக மாற்றுவதற்கான பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியின்கீழ், இது அமைவதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com