300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி

ஜால்னா: ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.390 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி
300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி
Published on
Updated on
1 min read


ஜால்னா: ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.390 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் ஒரு வணிகக் குழுமம், வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்து வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மிகப்பெரிய அளவிலான சோதனைக்கு வருமான வரித்துறை திட்டமிட்டது.

மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் அதிரடியாக 260 வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் சோதனையை நடத்தினர்.

வணிக நிறுவன குழுமத்தின் உரிமையாளர்கள் வீடு, அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பெரிய அளவில் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக அவர்கள் பண்ணை வீட்டில் நடத்திய சோதனையின் போது எதிர்பாராத வகையில் பணம், நகை, வைரம் என ரூ.390 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருமானத்தை மறைத்து வாங்கப்பட்டிருக்கும் சொத்துகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. இந்த 390 கோடி எந்தெந்த ரூபத்தில் இருந்தது என்றால்.. ரூ.56 கோடி ரொக்கப் பணம்.. இதை ஒட்டுமொத்தமாக எண்ணி முடிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு 13 மணி நேரம் ஆனதாம்.

32 கிலோ எடையுள்ள தங்க, முத்து, வைர நகைகள். இவற்றின் மதிப்பு ரூ.14 கோடி இருக்கலாம். இதில்லாமல் சொத்து ஆவணங்கள், முதலீடு பத்திரங்கள் போன்றவை ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வணிகக் குழுமமும் இரும்பு, ஆடை மற்றும் கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்தச் சோதனைக்காக வருமான வரித்துறையினர் சுமார் 120 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தனை அதிகாரிகள், இத்தனை வாகனங்கள், இத்தனை ரகசியம் காக்கப்படும்போதே, இந்த வருமான வரித்துறை சோதனை எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.

தற்போது வரை வருமான வரித்துறை, இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. சொத்து மதிப்புகளை கணக்கிட்டு விரைவில் அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.