
கோப்புப் படம்
ராஜஸ்தான் காவல் துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் வருவாய்த் துறை அதிகாரிகளால் 218 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை கூடுதல் டிஜிபி ரவி பிரகாஷ் மேஹ்ரா கூறியதாவது: “ பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களின் சந்தை மதிப்பு 40 லட்சம். இந்தப் போதைப் பொருள்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. கஞ்சா விசாகப்படினம் வழியாக ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்
இரண்டு இளைஞர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் சிவராஜ் மஹாவரால் ராஜஸ்தானிலில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கஞ்சாவை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிரத்தின் நாக்பூர் வந்தடைந்தபோது அவர்களிடம் இருந்து 218 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது." என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...