
மகாராஷ்டிரத்தில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயமடைந்ததாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி பகத் கி கோத்தி என்ற பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா ரயில் நிலையம் அருகே இன்று நள்ளிரவு 2.30 மணியளவில் சென்றபோது அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | அரசு மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெற இனி ஆதார் எண் கட்டாயம்!
இந்த விபத்தில், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், ரயில்வே துறையினர் மறுத்துள்ளனர்.
ஒரு பெட்டி மட்டுமே தடம் புரண்டதாகவும், இரண்டு பயணிகள்தான் காயமடைந்ததாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 5.24 மணியளவில் தடம் புரண்ட ரயில் புறப்பட்டுச் சென்றதாகவும், காலை 5.45 மணியளவில் ரயில் பாதை முற்றிலும் சீரமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.