தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

'கரோனா இன்னும் இருக்கிறது; பூஸ்டர் தடுப்பூசி அவசியம்'

கரோனா தொற்று இன்னும் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

கோப்புப் படம்

Published On :

கரோனா தொற்று இன்னும் பரவி வருவதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது. சமீபமாக ஒரு சில பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 9,062 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 12,608 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,01,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில்  நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், 'கரோனா இன்னும் இருக்கிறது. சமீப நாள்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மூன்றாவது தவணையான முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர் டோஸ்) செலுத்த வேண்டும். 

கரோனா இன்னும் இருப்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர வேண்டும்' என்று கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் கடந்த நான்கு வாரங்களில் இறப்பு சதவிகிதம் 35% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் 93,86,47,700 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் அவர்களில் 1,29,053,987 பேர் பூஸ்டர் டோஸ் போட்டுகொண்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 13 சதவீதம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.