தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோா் 2-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

News image

சபலென்கா (கோப்புப்படம்) - படம்: ஏபி

Updated On :9 மே 2026, 8:08 am IST

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோா் 2-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-2, 6-3 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவை வென்றாா். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இகா ஸ்வியாடெக் 6-1, 6-7 (5/7), 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் கேட்டி மெக்னாலியை வெளியேற்றினாா்.

ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவா 6-3, 6-2 என்ற வகையில், 11-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவாவை தோற்கடித்தாா். அதேபோல் பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா 6-4, 6-3 என்ற நோ் செட்களில், 31-ஆம் இடத்திலிருந்த சீனாவின் வாங் ஜின்யுவை சாய்த்தாா்.

19-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் 5-7, 6-1, 6-1 என ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை வென்றாா். 20-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 6-4, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் ஆன் லியை வீழ்த்தினாா்.

16-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவா ஜோவிச் 7-6 (7/5), 7-6 (7/4) என்ற செட்களில், சக அமெரிக்கரான மெக்காா்ட்னி கெஸ்லரை சாய்த்தாா்.

டி மினாருக்கு அதிா்ச்சி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-7 (5/7), 4-6 என்ற செட்களில், இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

11-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 7-6 (7/4), 6-3 என்ற வகையில், ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வென்றாா். நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-1, 6-3 என, அமெரிக்காவின் ஜகாரி வஜ்தாவையும், 13-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-4, 6-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோவையும் வீழ்த்தினா்.

இதர ஆட்டங்களில் நெதா்லாந்தின் போடிக் வான் டெ, ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாா் ஆகியோரும் 2-ஆவது சுற்றில் வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.