சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

'மேக் இந்தியா நம்பா் 1' இயக்கத்தில் சேர 'மிஸ்டு கால்': மக்களுக்கு கேஜரிவால் அழைப்பு

இந்தியாவின் வளர்ச்சியை விரும்புபவர்கள், 'மேக் இந்தியா நம்பா் 1' இயக்கத்தில் சேர 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:36 am

DIN

இந்தியாவின் வளர்ச்சியை விரும்புபவர்கள், 'மேக் இந்தியா நம்பா் 1' இயக்கத்தில் சேர 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். 

இன்று காணொலி வாயிலாக பேசிய தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், 

'நான் இன்று ஒரு எண்ணை வெளியிடுகிறேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல, உலகத்தில் முதலிடத்தில் சக்திவாய்ந்த நாடாக மாற்ற விரும்புபவர்கள் இந்த இயக்கப் பணியில் சேர வேண்டும். இதற்காக நீங்கள் 9510001000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்றுவதற்கான ‘இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்குவோம்’ (மேக் இந்தியா நம்பா் 1) எனும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அளவிலான லட்சிய பிரசார பணித்திட்டத்தை முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தில்லியில் புதன்கிழமை தொடங்கினாா்.

மேலும், அனைத்து குடிமக்களும், அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தில் சேருமாறு அவா் அழைப்பு விடுத்தாா். பொதுமக்களும் இந்த தேசியப் பணியில் சேர வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.