
கோப்புப்படம்
உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில்,
நிலநடுக்கமானது பித்தோராகரில் இருந்து 43 கீ.மீட்டரில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகவும், இதன் நீளம் 80.12 ஆகவும், 5 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.
படிக்க: துப்பாக்கி வைத்து விளையாடும்போது நிகழ்ந்த விபரீதம்: 10 வயது சிறுவன் பலி
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும், பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்மேற்கில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ன்சிஎஸ் தெரிவித்துள்ளது.