கோதுமை இறக்குமதி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு

 இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லையென மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லையென மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

ரஷியா உக்ரைன் போரினால் கோதுமையின் ஏற்றுமதிக்கு அதிகமான விலையேற்றம் கண்டது. மேலும் வெப்ப அலையினால் பயிர் சேதமடைந்தது. இதனாலும் கோதுமையின் விலையில் ஏற்றம் கண்டது. 

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை. ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும் கூட, உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் (எம்எஸ்பி) அதிகமாகவே உள்ளது.

அரசின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021-22 நிதியாண்டில் உள்நாட்டில் கோதுமை உற்பத்தி 10.64 கோடி டன்னை எட்டியது. 2020-21 ஆண்டு கோதுமை உற்பத்தியான 10.96 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு. இருப்பினும், 2016-17-லிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சராசரி ஆண்டு உற்பத்தியான 10.38 கோடி டன்னைக் காட்டிலும் கோதுமை உற்பத்தி அதிகமாகவே எட்டப்பட்டு வருகிறது என்று ஜூலை 1 ஆம் தேதி நரேந்திர சிங் தோமா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு நமது நாட்டிலே உள்ளது. மேலும், இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்திற்கான போதுமான இருப்பையும் கொண்டுள்ளது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com