பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் இருந்தால் நாடு எப்படி முன்னேறும்?: கேஜரிவால்

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தால் நாடு எப்படி முன்னேறும்? என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசைத் தாக்கியுள்ளார். 

இதுகுறித்து கேஜரிவால் மேலும் கூறுகையில், 

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.  பணவீக்கத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. 

ஆனால், மத்திய அரசு பல உயர் அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி விளையாடி வருகின்றது. மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கங்களைக் கவிழ்ப்பதிலும் மும்முரமாக உள்ளது.

மக்கள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி யாரிடம் பேசுவார்கள், யாரிடம் செல்ல வேண்டும்? நாடு எப்படி முன்னேறும்?" என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கும் இடையே போட்டி இருக்கும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

சாமானியர்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து முன்னாள் பிரதமர் மோடி பேசியதால் மக்கள் கேஜரிவாலை மோடிக்கு மாற்றாகப் பார்க்கிறார்கள் என்று சிசோடியா கூறியிருந்தார் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com