செம்மொழித் தமிழ் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

2020, 2021, 2022 ஆம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 
செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 
செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 

2020, 2021, 2022 ஆம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 

பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுக்கான செம்மொழித் தமிழ் விருதுகளை முறையே முனைவர் ம.ராஜேந்திரன், முனைவர் க.நெடுஞ்செழியன்  ஆகியோருக்கு முதல்வர் வழங்கினார். 

2020 முதல் 2022-ஆம் ஆண்டுகள் வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்து, 16 நூல்களையும் வெளியிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (22.8.2022) சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில், 2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், 2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று முத்தமிழறிஞர் அவர்கள் மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2006- ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஆவார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிறப்பினை கருதி முன்னாள் முதல்வர் கருணாநிதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்து ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’-யை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது, இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும்,  மு. கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. 

தற்பொழுது 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் முதல்வரால் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், மேனாள் தமிழ் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் மற்றும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரனுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரனுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், 2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் விருதுகளையும், விருதுடன் தலா 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியனுக்கு வழங்குகிறார் முதல்வர்
2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியனுக்கு வழங்குகிறார் முதல்வர்

2022-ஆம் ஆண்டிற்கான விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூய்க் செவ்வியார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அவர் வெளிநாட்டிலிருந்து வரவியலாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவருக்கான விருது பின்னர் வழங்கப்படும்.

மேலும், இவ்விழாவில் உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்,  சங்கால மக்கட் பெயர்க் களஞ்சியம், தமிழ்நாட்டில் சமணம் (கி.பி- 6-ஆம் நூற்றாண்டு வரை), ஒப்பில் தொல்காப்பியம், செம்மொழி தமிழ் இலக்கிய இலக்கண மேற்கோள் அடைவு, செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: எழுத்ததிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: சொல்லதிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: பொருளதிகாரம், தமிழர் பாரம்பரிய நெல் வகைச் சொல்லகராதி, உ.வே.சா. இலக்கிய அரும்பத அகராதியும் சங்கநூற் சொல்லடைவும், உ.வே.சா. நாட்குறிப்பு உள்ளிட்ட 16 நூல்களையும்  முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இதன்பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், '3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழுக்கு செம்மொழி என்று தகுதி பெற்று தந்ததும் திமுக அரசு தான்;

செம்மொழி தகுதி வழங்க வேண்டுமென கலைஞர் எடுத்த முயற்சியும், அவர் பணியையும் நாடு நன்றாக அறியும். 

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ் மொழி ஆய்வு, மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி வருகிறது' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com