உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்பு: வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள்

உத்தரகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி மாவட்டத்தில் புதன்கிழமை மீண்டும் மேக வெடிப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக சிர்பாடியா கிராமத்தில் உள்ள நெல்சாமி ஆறு நிரம்பி பாசன விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

இந்த மேகவெடிப்பால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இங்குள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மூல்கர்-தர்த்தி சாலையில் உள்ள சில பாலங்கள் சேதமடைந்துள்ளன. தர்த்தி அருகே சாலை துண்டிக்கப்பட்டு, அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நெல்ச்சாமி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரம் வசிக்கும் மக்கள், தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் உள்ளனர்.

ஆகஸ்ட் 19 அன்று ஏற்பட்ட மேக வெடிப்புகளில், தெஹ்ரி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதுவரை மீட்கப்பட்ட மொத்த ஏழு உடல்களில் 5 மாவட்டத்தின் குவாட் மற்றும் சில்லா கிராமங்களில் கண்டெடுக்கப்பட்டது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com