கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காங்கிரஸ் தலைவர் தேர்தல் எப்போது? ஆக. 28ல் செயற்குழு கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியை முடிவு செய்ய வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 5:55 am

DIN

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியை முடிவு செய்ய வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற முடிவு வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அக்கட்சி உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறார். தற்போதும் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தயாராக இல்லை என்றே தெரிகிறது. அவர் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி குறித்து முடிவு செய்ய வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

தற்போதைய தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி முடிவு செய்து கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.