பெண் குழந்தைகளைக் காப்போம் எனச் சொல்லிவிட்டு குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள்: ராகுல்

குஜராத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவத்தில், பில்கீஸ் பானுக்கு நீதி வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குரல் எழுப்பியுள்ளார்.
பெண் குழந்தைகளைக் காப்போம் எனச் சொல்லிவிட்டு குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள்: ராகுல்

குஜராத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவத்தில், பில்கீஸ் பானுக்கு நீதி வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குரல் எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து ராகுல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

பெண் குழந்தைகளைக் காப்போம் எனக் குரல் கொடுப்பவர்களே குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 

மேலும், இது நாட்டின் பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகள் பற்றிய கேள்வி? பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள் என்று இந்தியில் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

2002-ஆம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். மேலும் பில்கிஸ் பானு கண் முன்பே அவருடைய 3 வயது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதனை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனையடுத்து அவர்களது தண்டனை குறைப்பு மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. 

அதனடிப்படையில், இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 ஆயுள் தண்டனை கைதிகளும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com