இன்னும் 1,000 ரெய்டு நடத்தினாலும் எதுவும் கிடைக்காது: மணீஷ் சிசோடியா

இன்னும் 1,000 ரெய்டுகளை நடத்தினாலும் என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 
இன்னும் 1,000 ரெய்டு நடத்தினாலும் எதுவும் கிடைக்காது: மணீஷ் சிசோடியா

இன்னும் 1,000 ரெய்டுகளை நடத்தினாலும் என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 

தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேசியதாக பாஜக மீது அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில் கலால் கொள்கையில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவும் இதுகுறித்து குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய மணீஷ் சிசோடியா, 'முதல்முறையாக ஒரு எப்.ஐ.ஆரில் 'தகவல்' என்று பல இடங்களில் இருப்பதைப் பார்க்கிறேன். இது தவறான முதல் தகவல் அறிக்கை. என்னுடைய வீடு, அலுவலகத்தில் 14 மணி நேரம் நடத்திய சோதனையில் ஒரு பைசா கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

இன்னும் 1000 ரெய்டுகளை நடத்துங்கள், ஆனால் நீங்கள் என்னிடம் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

தில்லியின் கல்வியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நான் உழைத்தேன். அதனால்தான் நான் குற்றவாளியானேன். நாங்கள் செய்ததை இந்த உலகம் புகழ்கிறது. அதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com