ஹரியாணா: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு

ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள பலனா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் மரணம்
பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் மரணம்

ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள பலனா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இறந்தவர்கள் சங்கத் ராம், மனைவி மஹிந்தர் கௌர், மகன் சுக்விந்தர் சிங், அவரது மனைவி ரினா மற்றும் அவர்களது மகள்கள்  ஆஷு(5), ஜஸ்ஸி(7) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், சுக்விந்தர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்துள்ளார். 

நேற்றிரவு உணவருந்திய பின்னர் காலையில் மர்மமான முறையில் குடும்பத்தினர் இறந்து கிடந்தனர்.அந்த இடத்திலிருந்து தற்கொலை கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அம்பாலா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்குக் குற்றப் புலனாய்வுக் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அம்பாலா துணைக் கண்காணிப்பாளர் ஜோகிந்தர் சர்மா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com