எல்லைப்பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பிஎஸ்எஃப் வீரர்கள் கைது 

இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு சட்ட விரோதமாக நுழைய முயன்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்)  கைது செய்யப்பட்டுள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு சட்ட விரோதமாக நுழைய முயன்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்)  கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆக. 26 அன்று மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியில் 24 பர்கானா மாவட்டத்தில் பாக்டா எல்லைப்பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். பிஎஸ்எஃப் துணை காவலதிகாரி மற்றும் கான்ஸ்டபில் இருவரும் கைது செய்யப்பட்டு மேற்கு வங்க காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

“இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக வங்கதேசத்திற்கு நுழைய முயன்ற பெண்ணை அருகிலுள்ள நிலத்திற்கு இழுத்துச் சென்று வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார் கான்ஸ்டபில். துணை காவல் அதிகாரி இவருக்கு உதவி புரிந்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்ததும் இருவரையும் பணியிடை நீக்கம் செய்தோம். பிறகு இருவரையும் கைது செய்து மேலும் விசாரணைக்கு ஒப்படைத்துள்ளோம்” என காவலதிகாரி தெரிவித்தார். 

அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதில் பிஎஸ்எஃப் படையினா் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளை அவா்கள் திறம்படப் பாதுகாத்து வருகின்றனா்.

அவா்களது அதிகார வரம்பு அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவித்தது. அதன்படி, பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் இருந்து 15 கி.மீ. வரை இருந்த அதிகார வரம்பு, 50 கி.மீ.-ஆக அதிகரிக்கப்பட்டது. மம்தா கட்சியினர் இது தவறென வாதிட்டு வருகின்றனர்.  

இந்த சம்பவம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே வார்த்தை போரில் ஈடுபடவைத்துள்ளது.

“பாஜகவின் ஆட்சியில் நமது நாடு பெண்களுக்கு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. இராணுவ அதிகாரிகள் பெண்ணை வன்புணர்வதும் வெளியே கூறினால் கொலை செய்து விடுவேனென மிரட்டுவதும் பார்க்கிறீர்களா அமித் ஷா; ஆதம்நிர்பார் பாரத் என்பது இதுதானா!” என  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.  

இதற்கு பதிலளித்த பாஜகவினர், “திரிணாமுல் காங்கிரஸின் இந்த கமெண்டுகள் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த இராணுவத்தையும் குறை சொல்லக்கூடாது. தவறிழைத்த்வருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும்” எனக் கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com