மத்தியப் பிரதேசம்: கண்டெய்னரில் கடத்திய 12 கோடி மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியிலிருந்து 12 கோடி மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மற்றும் ஹெட்செட்டுகளை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியிலிருந்து 12 கோடி மதிப்பிலான திருட்டு செல்போன்கள் மற்றும் ஹெட்செட்டுகளை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

சாகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தருன் நாயக் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி அடையாளம் தெரியாத 4 நபர்கள் 44வது தேசிய நெடுஞ்சாலை மஹாராஜ்பூர் கிராமத்திற்கு அருகில் வியாழக்கிழமை இரவு வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து குருகிராம்க்கு கண்டெய்னரில் 12 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

திருடப்பட்ட பொருள்களை வேரொறு கண்டெய்னருக்கு மாற்றியுள்ளார்கள். அப்போது இந்தோரில் வெள்ளிக்கிழமை மாலையில் காவல்துறையினரால் சோதனையில் ஈடுபட்ட போது வாகனத்தை விட்டு தப்பியோடி விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

திருடப்பட்ட செல்போன்கள் 24 மணி நேரத்தில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து 400கிமீ தொலைவில் கண்டெய்னரில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். 

அடையாளம் தெரியாத 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கண்டெய்னர் லாரி சிறைப்பிடிக்கப்பட்டது. மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com