
கோப்புப் படம்
தெலங்கானா அமைச்சர் வீட்டில் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநில சாலைகள் மற்றும் கட்டடங்கள் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் வெமுலா பிரசாந்த் ரெட்டி. வேல்புரில் உள்ள இவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் தேவேந்தர்(19) என்கிற இளைஞர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இந்த இளைஞர் அமைச்சரின் இல்லத்தில் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க- ஆப்கானிஸ்தான்: ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்குகள்
தற்கொலை செய்துகொண்ட தேவேந்தர், பெண் ஒருவருடன் நட்பாக பழகிவந்ததும் தற்கொலைக்கு முன் அந்த பெண்ணுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமைச்சர் வீட்டில் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.