கட்சியிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தினார்கள்: குலாம் நபி ஆசாத்

கட்சியிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தினார்கள்: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். 

காங்கிரஸிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். 

இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காங்கிரஸில் இருந்து வெளியேற மோடியை ஒரு காரணமாகக் கூறுவது சாக்குபோக்கு. காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே காங்கிரஸாருக்கு என்னிடம் பிரச்னை உள்ளது. அவர்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ கேள்விகளை எழுப்புவதையோ அவர்கள் எப்போதும் விரும்பவில்லை. இதுவரை பல காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன. ஆனால், ஒரு முடிவு கூட எடுக்கப்படவில்லை. காங்கிரஸிலிருந்து வெளியேற என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில என் நண்பர்களே என்னைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். காங்கிரஸில் விரோதிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்' என்று தெரிவித்தார். 

மேலும், அவர் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும் இன்னும் 10 நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். 

முன்னதாக, காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும், இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com