'கிணற்றில் கூட குதிப்பேன், காங்கிரஸில் இணைய மாட்டேன் என நண்பரிடம் கூறினேன்'

கிணற்றில் கூட குதித்துவிடலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடாது என்று தான் நம்பியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
'கிணற்றில் கூட குதிப்பேன், காங்கிரஸில் இணைய மாட்டேன் என நண்பரிடம் கூறினேன்'
'கிணற்றில் கூட குதிப்பேன், காங்கிரஸில் இணைய மாட்டேன் என நண்பரிடம் கூறினேன்'


புது தில்லி: கிணற்றில் கூட குதித்துவிடலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடாது என்று தான் நம்பியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சனிக்கிழமை மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் நடைபெற்ற தொழில்முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி இவ்வாறு கூறியிருக்கிறார்.

தான் மாணவராக இருந்த போது நடந்த விஷயம் ஒன்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதாவது, சிறப்பான எதிர்காலத்துக்காக, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணையுமானு மூத்த தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார். நீ மிகவும் நல்லவன். ஆனால், தவறான கட்சியில் இருக்கிறாய் என்றும் அவர் கூறினார். உனக்கு சிறப்பாக எதிர்காலம் வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியில் இணைவதுதான் நல்லது என்றார். ஆனால், நான் ஸ்ரீகாந்திடம் கூறினேன். நான் கிணற்றில் விழுந்து குதித்து இறந்தாலும் இறப்பேன், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன், ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே எனக்குப் பிடிக்கவில்லை என்று பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், ஒரு தனிநபராக இருந்தாலும், வணிகமாகவோ சமூகப் பணியாகவோ, அரசியலாகவோ இருந்தாலும் கூட மனிதத் தொடர்பு என்பதுதான் மிகப்பெரிய பலம்.

யாருடைய கைகளையாவது நீங்கள் பற்றினீர்கள் என்றால், அதனை எப்போதும் பிடித்திருங்கள் என்றும் பாஜக தலைவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com