92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் கார் விழுந்து 7 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 1:00 pm

DIN

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் கார் விழுந்து 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சத்ரூ என்ற இடத்தில் டாடா சுமோ கார் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.