மணீஷ் சிசோடியா வங்கிப் பெட்டகத்தில் சிபிஐ சோதனை: கிடைத்தது என்ன?

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை
சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31  இடங்களில் சோதனையும் நடத்தியிருந்தது.

இந்த நிலையில், காசியாபாத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், மணீஷ் சிசோடியாவின் பெட்டகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினார்கள்.

சிபிஐ சோதனை குறித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், எனது வீட்டில் எதுவும் கிடைக்காதது போன்று, சிபிஐ சோதனையில் எனது வங்கிப் பெட்டகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் எங்களை நன்றாக நடத்தினார்கள், நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். உண்மை வென்றது.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com