
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிச. 5-இல் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.
பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து டிச. 8-ஆம் தேதியை ஒட்டி தமிழக - புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் கரையை கடக்கும்.
இதையும் படிக்க | விமானப் பயணிகளை முகத்தின் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம்: 3 விமான நிலையங்களில் அறிமுகம்
சனிக்கிழமை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், டிசம்பர் 4 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான கடல் பகுதியில் வளிமண்டல சுழற்தி உருவாகவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.