உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பொதுவான விதிமுறைகள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடா்பாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான விதிகளை வகுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து ஆராயும்படி மத்திய அர
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடா்பாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான விதிகளை வகுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து ஆராயும்படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

‘கிஃப்ட் ஆஃப் லைஃப் அட்வென்சா் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அம்மனுவில், ‘உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான விதிகளில் பொதுவான தன்மை இல்லை. இதன் காரணமாக, உறுப்புகளைத் தானமாக பெறுவதற்காகப் பதிவு செய்ய வேண்டுவோா் 10 முதல் 15 ஆண்டுகள் அம்மாநிலத்தில் வசித்ததற்கான இருப்பிடச் சான்றிதழை வழங்க வேண்டும் நிபந்தனையை சில மாநிலங்கள் கட்டாயமாக்கியுள்ளன. மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுகள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994-இன்கீழ் பொதுவான விதிகளைக் கொண்ட விதிமுறைகளை வகுக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிடவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வுக்குமுன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘நாங்கள் உங்கள் மனுவை நிராகரிக்க வில்லை. இவ்விவகாரம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் ஆராயப்படும். தகுந்த காரணத்தின் அடிப்படையில் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும்’ எனக் கூறி அம்மனுவை தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com