குஜராத்: முஸ்லீம் தொகுதிகளிலும் பாஜக வெற்றி! காங்கிரஸ் காரணமா?

பாஜகவில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்கள் கூட குஜராத் பேரவைத் தேர்தலில் நிறுத்தப்படாத நிலையில், பாஜக முஸ்லீம்கள் அதிகமுள்ள தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லீம் தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல், முஸ்லீம் மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பை கைப்பற்றியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. 

குஜராத்தின் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச. 1 மற்றும் 5 எல இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (டிச.8) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், குஜராத்தின் பல பகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 156 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. மற்ற கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக அதிக அளவிலான தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது. முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி பிரகாசமாகவுள்ளது.

பாஜகவில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்கள் கூட குஜராத் பேரவைத் தேர்தலில் நிறுத்தப்படாத நிலையில், பாஜக முஸ்லீம்கள் அதிகமுள்ள தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

குஜராத்தில் முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள 17 தொகுதிகளில் 12-ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

முஸ்லீம்கள் அதிகமுள்ள டரியாபூர் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் கியாசுதீன் ஷேக், பாஜக வேட்பாளர் கெளசிக் ஜெயினிடம் தோல்வியடையும் நிலையில் உள்ளார். 

முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள 17 தொகுதிகளில் 16-ல் ஆம் ஆத்மி வேட்பாளர்களை களமிறக்கியது. அக்கட்சி தோல்வியையே தழுவியுள்ளது.

அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் முஸ்லீம்கள் ஒட்டுகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. 2 முஸ்லீம் அல்லாதவர்கள் உள்பட அக்கட்சி 13 வேட்பாளர்களை களமிறக்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜமால்பூர், வத்கம் ஆகிய தொகுதிகளில் பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளது. 

காங்கிரஸ் வேட்பாளர் ஜமால்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார். வத்கம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். 

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து முஸ்லீம் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. 

சுதந்திர நாளையொட்டி பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களை பாஜக வரவேற்று, அந்த விடுதலையைக் கொண்டாடியது. இது அனைத்தும் குஜராத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அதற்கு எதிர்மாறாக தேர்தல் முடிவுகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.