
ரிவாபா ஜடேஜா
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா முன்னிலையில் உள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பாக ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜா போட்டியிட்டுள்ளார். இவருக்காக ரவீந்திர ஜடேஜா வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இதையும் படிக்க | குஜராத், ஹிமாசலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
முன்னதாக, ஜடேஜாவின் தந்தையும், தங்கையும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இதே தொகுதியில் பிரசாரத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.