அரிதிலும் அரிதான வழக்கு: 1973-ல் நடந்த கொலையில்  ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது

மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
அரிதிலும் அரிதான வழக்கு: 1973-ல் நடந்த கொலையில்  ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது
அரிதிலும் அரிதான வழக்கு: 1973-ல் நடந்த கொலையில்  ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது

மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், ஆதார் அட்டையை வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்த நிலுவை வழக்குகளை தூசு தட்டிய காவல்துறை ஆய்வாளர், ஆதார் அட்டையில் இருக்கும் பெயர்களைக் கொண்டு குற்றவாளியைத் தேட முடிவு செய்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

இதன் அடிப்படையில், 23 வயதில் கொலை செய்த சீதாராம் பட்டானே என்ற 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சைஜ்பூர் பகுதியில் 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டின் உரிமையாளரான 70 வயது மணிபென் ஷுக்லாவின் வீட்டில் பொருள்களைக் கொள்ளையடிக்க, வீட்டுக்குள் புகுந்த சீதாராமை, அவர் பார்த்துவிட்டு கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து, அவரைக் கொன்றுவிட்டு சீதாராம் பட்டானே தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டும் சீதாராமை கண்டுபிடிக்க முடியவில்லை. சொந்த ஊரான அகமது நகருக்குச் சென்று காவல்துறையினர் தேடியும் அவரைக் கைது செய்ய முடியவில்லை.

இதையடுத்து, புதிதாக காவல்துறை ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பி.வி. கோஹில், நிலுவையில் இருந்த வழக்குகளை தூசு தட்டினார். அப்போதுதான், அகமதுநகரில், குற்றவாளி பெயரில் ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறதா என்று தேட முடிவு செய்யப்பட்டது.

ஆதார் அட்டைகளின் தகவல்களை சோதனை செய்ததில், ரஞ்சனி கிராமத்தில் அவரது பெயரில் ஆதார் அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு சீதாராம் பட்டானேவைப் பார்த்த காவல்துறையினர், அவரிடம் விசாரித்த போது, 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, 1973ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com