ஹிமாசலுக்கு யார் முதல்வர்? இன்று காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (டிச.9) நடைபெறவுள்ளது. 
ஹிமாசலுக்கு யார் முதல்வர்? இன்று காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (டிச.9) நடைபெறவுள்ளது. 

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. 

தோ்தல் முடிவுகள் முழுவதும் வெளியானவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் கூட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவா் பிரதிபா சிங் தோ்தலில் போட்டியிட வில்லை. எனினும் அவா் முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன. 

முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்ட ஆஷா குமாரி 9,918 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளாா். அவா் ஏற்கெனவே 6 முறை எம்எல்ஏ-வாக இருந்துள்ளாா்.

முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவரான குல்தீப் சிங் ரத்தோா் தியோக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவா் சுக்விந்தா் சிங், ஹரோலியின் புதிய எம்எல்ஏவும் முந்தைய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவருமான முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அங்கு 67 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com