ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நிதி: அமித் ஷா

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நிதியுதவி கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நிதி: அமித் ஷா

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நிதியுதவி கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதல் குறித்து எதிர்க்கட்சிகள் இன்று கேள்வி எழுப்பின. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விளக்கம் கொடுத்தார். 

அதேநேரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், 'சீனாவிடம் இருந்து காங்கிரஸின் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஏராளமான நிதியுதவி கிடைத்துள்ளது. கடந்த 2005- 2007 காலகட்டத்தில் சீன தூதரகத்தில் இருந்து 1.35 கோடி ரூபாய் வந்துள்ளது. விதிகளை மீறி இந்த தொகை வந்துள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் ரத்து செய்ய அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் (எப்.சி.ஆர்.ஏ) ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விவாதிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. அதுகுறித்த கேள்விக்கு காங்கிரஸ் பயப்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளின் நிதியும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ், இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்துப் பேசுகிறது.

இந்தியாவின் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்க அனுமதிக்காது' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com