இந்திய - சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை: ராஜ்நாத் சிங் விளக்கம்

அருணாசல பிரதேச எல்லையில் இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார்.
இந்திய - சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை: ராஜ்நாத் சிங் விளக்கம்

அருணாசல பிரதேச எல்லையில் இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்றும் இந்திய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்களை உடனடியாக ஒத்திவைத்துவிட்டு எல்லைப் பிரச்னை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அவைகளில் விவாதம் நடத்த வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் இன்று முழக்கம் எழுப்பியதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் பகல் 12 மணிக்கு அவைகள் கூடியவுடன், மக்களவையிலும், தொடர்ந்து மாநிலங்களவையிலும் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

 “டிசம்பர் 9ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதை துணுச்சலுடன் எதிர்கொண்ட இந்திய ராணுவம் அத்துமீறலை தடுத்து நிறுத்தியது.

அப்போது, இந்திய - சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில், நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவோ, பலத்த காயமடையவோ இல்லை. இந்திய ராணுவ கமெண்டர்கள் சரியான நேரத்தில் இந்த பிரச்னையில் தலையிட்டதால், உடனடியாக சீன ராணுவ வீரர்கள் அவர்களின் பகுதிகளுக்கு பின் வாங்கினர்.

இதன்பிறகு டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு கமெண்டர்களும் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையில், எல்லையில் அமைதி காக்கப்படும் என்று சீன தரப்பும் தெரிவித்துள்ளது.”

தொடர்ந்து ராஜ்நாத் சிங்கின் அறிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்காததால், மக்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com