சீனாவுடனான வணிகத்தை ஏன் நிறுத்தவில்லை: கேஜரிவால் கேள்வி!

சீனாவுடனான வணிகத்தை நாம் ஏன் நிறுத்தக்கூடாது? சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)

புதுதில்லி: எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கிடையே மோதல் ஏற்பட்ட சில நாட்கள் சென்ற நிலையில், சீனாவுடனான வர்த்தகத்தை இந்தியா இன்னும் ஏன் நிறுத்தவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, சீனாவுடனான வணிகத்தை நாம் ஏன் நிறுத்தக்கூடாது? சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதன் மூலம், நாம் சீனாவுக்கு பாடம் புகட்டலாம். அதே வேளையில், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் உயரும் எனக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 9-ஆம் தேதி அன்று அருணாசலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள யாங்சே பகுதியில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற சீனாவின் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததாக தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com