
குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
புது தில்லி: குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த செவ்வாயன்று, பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா அறிமுகம் செய்திருந்தார்.
இதையும் படிக்க.. மெரீனாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
இந்த மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடத்தப்பட்டது. பிறகு, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு முறையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அரசியல், கட்சி வித்தியாசங்களை எல்லாம் கடந்து, மசோதாவுக்கு பல்வேறு கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையும் படிக்க.. சீனத்துக்கு என்னதான் பிரச்னை?
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.