
அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் முறை கொண்டுவரப்படும் என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு செமஸ்டர் முறை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிக்கையினையும் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு: ஒரே மாதத்தில் ரூ.9.21 கோடி வசூல்!
தேசியக் கல்விக் கொள்கை-2020-ஐ சிறப்பாக செயல்படுத்துவதற்கு இந்தப் புதிய நடைமுறை பெரிதும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த இரண்டு செமஸ்டர் முறை அடுத்தக் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என்ற தகவல் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த இரண்டு செமஸ்டர் நடைமுறை பின்பற்றப்படும். இந்த செமஸ்டர் முறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்த செமஸ்டர் முறையில் பாடங்களை கற்றுக்கொள்வது மேலும் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.