வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு: ஒரே மாதத்தில் ரூ.9.21 கோடி வசூல்!

மும்பை மற்றும் குஜராத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே மாதத்தில் பயணச் சீட்டு கட்டணமாக ரூ.9.21 கோடி வருமானம்
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை: மும்பை மற்றும் குஜராத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே மாதத்தில் பயணச் சீட்டு கட்டணமாக ரூ.9.21 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது. 

குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து  மும்பைக்கு கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் 16 பெட்டிகளுடன் 1,128 பயணிகள் அமரும் வசதி கொண்டுள்ளதாகவும், காந்திநகரில் இருந்து மும்பைக்‍கு ஐந்தரை மணி நேரத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

மும்பையில் இருந்து காந்திநகர் வரை ஏசி பிரிவு பயண இருக்கை கட்டணம் ரூ.1,275 ஆகவும், காந்திநகரில் இருந்து மும்பைக்கு ரூ.1,440 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், மும்பையில் இருந்து காந்திநகருக்கு எக்சிகியூட்டிவ் பயண இருக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 455 ஆகவும், மீண்டும் திரும்பும் பயண கட்டணம் ரூ.2 ஆயிரத்து 650 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

ரூ.9.21 கோடி வருவாய்: 
இரண்டு மாதங்களாக இயங்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மும்பை-காந்திநகர் வந்தே பாரத் ரயில் (எண் 20901) பயணச் சீட்டு மூலம் ரூ.4 கோடியே 49 லட்சம் மற்றும் காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில் (எண் 20902) பயணச் சீட்டு மூலம் ரூ. 4 கோடியே 72 லட்சம் என மொத்தம் ரூ.9 கோடியே 21 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. 

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது, வந்தே பாரத் ரயில்களால், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்று மும்பை - அகமதாபாத்  இடையே இயக்கப்படும் மற்ற ரயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த ரயில்களும் 100 சதவீத பயணிகளுடன் இயங்கி வருகிறது, வருமானமும் பாதிக்கப்படவில்லை. உண்மையில், இந்த வழித்தடத்தில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டதன் மூலம், ஏராளமான பயணிகளின் தேவையைத்தான் நிறைவு செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபரில் வந்தேபாரத் ரயில் பயணச் சீட்டு மூலம் ரூ.8 கோடியே 25 லட்சம் வருவாய் கிடைத்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com