
ஹைதராபாத்: தெலங்கானாவில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
தெலங்கானா மாநிலம், மன்சேரியல் மாவட்டத்தில் ராமகிருஷ்ணாபூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெங்கடாபூர் கிராமத்தில் சிவய்யா என்பவரின் வீடு நள்ளிரவு 12.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | நீதிபதியான முதல் திருநங்கை அரசிடம் கேட்பது ஒன்றுதான்!
அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் சிவய்யா (50), அவரது மனைவி பத்மா (45), பத்மாவின் மூத்த சகோதரியின் மகள் மோனிகா (23) மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு உறவினர் என 6 பேர் பலியாகினர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.