
நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை அரசிடம் கேட்பது ஒன்றுதான்!
தங்களது சமூக மக்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் திருநங்கை ஜோயிதா மண்டல் வலியுறுத்தியிருக்கிறார்.
காவல்துறை, ரயில்வே உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளில் திருநங்கைகள் சேர்க்கப்படும்போதுதான், இந்த சமுதாயத்தை உலகம் பார்க்கும் பார்வையே மாறும் என்றும், அவர்களது வாழ்க்கை மேம்படும் என்றும் மண்டல் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை வெடித்துச் சிதறியது
தங்களது சமுதாய மக்களுக்கு என்று தங்கும் விடுதிகளை அரசுகள் உருவாக்க வேண்டும், நாட்டில் அதிகரித்துவரும் திருநங்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு உடனடியாக இந்த திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மிகவும் அவசியமான ஒன்று. எனக்கு வேலை இல்லையென்றால், யார் எனக்கு சாப்பாடு போடுவார்கள்? என்றும் மண்டல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிக்க.. அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை: குழந்தையை கொன்ற தாய் வாக்குமூலம்
உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள், தங்கள் சமுதாய மக்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
ஜோயிதா, கடந்த 2017ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் இஸ்லாம்பூர் மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியிமிக்கப்பட்டார். நாட்டிலேயே, மிக உயர்ந்த இதுபோன்ற ஒரு பதவியில் நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை இவர்.