
கோப்புப்படம்
பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை (அக்வேரியம்) வெடித்துச் சிதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த 52 அடி உயரமுள்ள உருளையான நீர்வாழ் காட்சிசாலையில் 1500க்கும் அதிகமான அதிசய மீன்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.
இதையும் படிக்க.. நீதிபதியான முதல் திருநங்கை அரசிடம் கேட்பது ஒன்றுதான்!.
அந்நாட்டு நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில், இது எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதால், அந்த அக்வேரியம் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒட்டுமொத்தமாக சேதமடைந்தது. இந்த கட்டடத்தில் ஏராளமான உணவகங்கள், பொழுதுபோக்கு அமைப்புகள், கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பாதிக்கப்பட்டன. அக்வேரியத்துக்குள் நிரப்பப்பட்டிருந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கட்டடத்திலிருந்து வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடியது. அதிலிருந்த 1500 மீன்களும் இறந்துவிட்டன.
அதிர்ஷ்டவமாக இந்த அக்வேரியம் காலை 6 மணிக்கு வெடித்துச் சிதறியது. இதனால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு வேளை ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெடித்திருந்தால் கூட, கட்டடம் மற்றும் சாலையில் மக்கள் கூட்டம் இருந்திருக்கும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை: குழந்தையை கொன்ற தாய் வாக்குமூலம்
உடனடியாக கட்டப் பகுதியில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த விடுதிகளிலிருந்து 300 விருந்தினர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நீர்வாழ் காட்சிசாலைதான் உலகிலேயே, உருளையாக அமைக்கப்பட்டமிகப்பெரிய அக்வேரியமாக அறியப்பட்டு வந்தது.