அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை:  குழந்தையை கொன்ற தாய் வாக்குமூலம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஆர்யா சிங், தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலை செய்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை:  குழந்தையை கொன்ற தாய் வாக்குமூலம்
அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை:  குழந்தையை கொன்ற தாய் வாக்குமூலம்

நியூ யார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஆர்யா சிங், தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலை செய்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது, 2018ஆம் ஆண்டு, தனக்குப் பிறந்த பெண் குழந்தையை கடலில் வீசிக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேபி ஜூன் என்று அழைக்கப்படும் அந்தக் குழந்தையைக் கொன்றதை பெண் ஒப்புக் கொண்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ஃப்ளோரிடாவில் உள்ள கடற்கரையில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குழந்தையின் தந்தைதான் விசாரணைக்கு உதவியதாகவும், குழந்தை பற்றி தந்தைக்கு எதுவும் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த போது, குழந்தையின் உடல் கடலில் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர், பொதுமக்களுக்கு அளித்த அறிவிப்பின் மூலம், அப்பெண்ணின் காதலன் காவல்துறையினரை அணுகியுள்ளார். காவல்துறையினர் குறிப்பிட்ட அந்த நேரத்தில், தனது காதலி கருவுற்றிருப்பதாக தன்னிடம் கூறியதாகவும், அவளே அதை கவனித்துக் கொண்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், ஆர்யா சிங், கருக்கலைப்பு செய்திருப்பார் என்றே குழந்தையின் தந்தை கருதியிருந்தார். இது குறித்து ஆர்யாசிங் கூறுகையில், தனக்கு விடுதி அறையின் கழிப்பறையில் குழந்தை பிறக்கும் முன் வரை தான் கருவுற்றிருப்பதே தனக்குத் தெரியாது என்று கூறியிருந்ததாக வழக்கை நடத்தி வரும் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு குழந்தை பிறந்த போது அது உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அதனால்தான் அதனை கடலில் வீசினேன் என்று ஆர்யா கூறியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், கடலில் வீசப்படும்போது குழந்தை உயிரோடு இருந்திருக்கவே வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கினறனர்.

அவளை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் என்னுடன் தான் இருந்தாள். அவளை எங்கே அப்புறப்படுத்துவது என்று அப்போதுதான் முடிவு செய்தேன் என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், ஆர்யா சிங் மற்றும் குழந்தையின் தந்தையின் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஆர்யாவின் செல்லிடப்பேசி உரையாடல்களைக் கொண்டு அவர் 2018ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி அதாவது கடலில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு 40 மணி நேரம் முன்பு  கடற்கரைப் பகுதியில்தான் தங்கியிருந்தார் என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com