தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்துள்ளதையடுத்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தவெகவின் இணை பொதுச் செயலாளர், முதன்மை செய்தி தொடர்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,
"வதந்திகளை நம்ப வேண்டாம்!
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது சசிகலா, ராமதாஸ் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
இருப்பினும் பொதுமக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!
வாய்மையே வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார்.
வதநà¯à®¤à®¿à®à®³à¯ நமà¯à®ª வà¯à®£à¯à®à®¾à®®à¯!
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) March 16, 2026
à®à®®à¯à®ªà®à®¾à®²à®®à®¾à® à®à®¿à®² à®à®à®à®à¯à®à®³à®¿à®²à¯à®®à¯, à®à®®à¯à® வலà¯à®¤à®³à®à¯à®à®³à®¿à®²à¯à®®à¯ à®à®°à®à®¿à®¯à®²à¯ லாபதà¯à®¤à®¿à®±à¯à®à®¾à® திà®à¯à®à®®à®¿à®à¯à®à¯ à®à®¿à®² பà¯à®¯à¯à®¯à®¾à®© à®à¯à®¯à¯à®¤à®¿à®à®³à¯ பரபà¯à®ªà®ªà¯à®ªà®à¯à®à¯ வரà¯à®à®¿à®©à¯à®±à®©. à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¾à®, பாà®à®/à®à®à®à®¤à®¿à®®à¯à® à®à®²à¯à®²à®¤à¯ திரà¯à®®à®¤à®¿. à®à®à®¿à®à®²à®¾, மரà¯à®¤à¯à®¤à¯à®µà®°à¯ à®à®¯à¯à®¯à®¾ ராமதாஸ௠வரà¯à®à®³à¯ தமிழ஠வà¯à®±à¯à®±à®¿à®à¯à®à®´à®à®¤à¯à®¤à¯à®à®©à¯â¦
Summary
TVK Executive CTR Nirmalkumar clarification about alliance talk with parties
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பாஜகவுடன் திமுக - அதிமுக கூட்டணி! 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி! - நிர்மல் குமார்
தமிழக முதல்வா் விஜய் பிறந்த நாள் விழா
விடியோக்கள்
சாவர்க்கர்தான் இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் ! ஆ ராசா பேச்சு!




