மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளின்படி, நாட்டில் ஒட்டுமொத்த கடவுச்சீட்டுகளில் 2.2 கோடி அல்லது 23 சதவீதம் பாஸ்போர்ட்டுகள் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தலா ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். அதற்கடுத்த இடத்தில்தான் தமிழகம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், கர்நாடக மாநிலங்கள் அணிவகுத்துள்ளன. அதாவது தமிழகத்தில் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். மக்கள் தொகையில் தமிழகமும், மகாராஷ்டிரமும் முன்னிலையல் இருந்த போதும், குறைந்த மக்கள் தொகை கொண்ட கேரளம், இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்திலோ 87.9 லட்சம் பேர் தான் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்.