இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்கக்கூடாது: உ.பி.முதல்வர்

உத்தரப் பிரதேசத்தில் வெப்பநிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்கக்கூடாது: உ.பி.முதல்வர்
இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்கக்கூடாது: உ.பி.முதல்வர்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் வெப்பநிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கிக் கிடக்கின்றனர். இதில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்கும் வகையில், நிவாரண  உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்  என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் போர்வைகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், அவற்றின் விலையில் சீரான தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் தெரிவித்தார். 

அதேசமயம், போர்வைகள் கொள்முதலில் உள்ளூர் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், நிவாரணப் பொருள்களை உள்ளூர் எம்.பி., எம்எல்ஏ.க்கள், தலைவர்கள், பிரதிநிதிகளால் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும். நிர்வாக அதிகாரிகளும் உதவியைச் செய்வார்கள். 

அனைத்து நகரங்களிலும் இரவு தங்குமிடங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இனி சாலைகளில் ஒருவரும் குளிரில் நடுங்குவதைப் பார்க்கக்கூடாது என்றார். 

இரவு தங்குமிடங்களில் சுத்தம் மற்றும் சுத்திகரிப்பைத் தவிர படுக்கைகள் மற்றும் பாதுகாப்பையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com