தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.40,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Published on
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.40,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. 

அதன்படி, டிசம்பர் 19-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.112 உயர்ந்து, ரூ.40,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.5,070 ஆக விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.73,100-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் உயர்ந்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

திங்கள்கிழமை நிலவரப்படி

தங்கம் கிராம் - ரூ.5,070

தங்கம் ஒரு சவரன் - ரூ.40,560

வெள்ளி கிராம் - 73.10

ஒரு கிலோ வெள்ளி - ரூ.73,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com